தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான அசோக் செல்வன், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக இருக்கும் ‘கேங்க்ஸ்’ வெப் தொடரில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அசோக் செல்வனின் மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு நடந்ததில் நீ வந்தது தான் சிறந்த விஷயம். உன் அன்பும் மகிழ்ச்சியும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் சிறந்ததை வெளிப்படுத்துகிறது. உங்கள் பெரிய இதயத்திற்கு, நீங்கள் எல்லாவற்றையும் மிகுதியாகப் பெறுவீர்கள்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.