டிஜிட்டலில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்!

hfdhd

தன் உடம்பைக் குறைப்பதற்காக சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புகொண்டார். இதையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் ’பெண்குயின்’ தமிழ்ப் படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கீர்த்தியின் பிறந்தநாளன்று வெளியானது. முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

கீர்த்தி சுரேஷ், கர்ப்பிணிப் பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. இதற்கிடையே ரிலீசுக்குத்தயாராக இருக்கும் படங்களை 'அமேசான்' நிறுவனம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்', 'டக்கர்' ஆகிய படங்களைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனம் 'பெண்குயின்' படத்தையும் கைப்பற்றிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகவுள்ளது.

karthick subburaj keerthy suresh penguin
இதையும் படியுங்கள்
Subscribe