/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/398_10.jpg)
கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியில் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாகியாகவும் தமிழில் கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘ரிவால்வர் ரீட்டா’ படக்குழு படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது.
இப்படத்தை சந்துரு இயக்க பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிவடைந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.
இந்த நிலையில் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில் அதில், தனது ஹேண்ட் பேக்கில் துப்பாக்கி, கத்தி, வெடிக்குண்டு வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தான் போலீஸா, ரா ஏஜெண்டா அல்லது டானா என்ற குழப்பத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறார். இந்தப் படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)