ஆஸ்கருக்குப் பரிந்துரை - படக் குழுவிற்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து...

jallikatu

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. 'மாவோயிஸ்ட்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

லிஜோ ஜோஸ்பெல்லிசேரிஇயக்கியஇப்படம், ஆஸ்கர் விருதுக்கு, இந்தியா சார்பில்அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கவுள்ள ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த சர்வதேசப்படத்திற்கான விருதிற்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், 'ஜல்லிக்கட்டு' படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், "ஜல்லிக்கட்டுப் படத்தின்மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களின்ஆஸ்கர் பயணத்திற்கு வாழ்த்துகள்" எனத் தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

jallikattu keerthy suresh
இதையும் படியுங்கள்
Subscribe