/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/459_4.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சர்க்கார்வாரி பாட்டா' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவை அறைந்து விட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ”ஒரு நாள் படப்பிடிப்பின் போது மகேஷ் பாபுவின் முகத்தில்தவறுதலாக அடித்து விட்டேன். உடனடியாக மன்னிப்பு கேட்டேன். அதற்கு பெருந்தன்மையோடு நடந்துகொண்டஅவர் பரவாயில்லை, கவலை வேண்டாம் என்றார். இருப்பினும் எனது மனம் கேட்கவில்லை. மகேஷ் பாபுவிடம்சென்று தொடர்ச்சியாக மூன்று முறை மன்னிப்பு கேட்டேன்" எனக்கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)