
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு. இவர் நடிப்பில், கடைசியாக'சரிலேருநீக்கெவரு' படம், பொங்கல் விருந்தாகதிரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அப்படம், 'இவனுக்குச் சரியான ஆள் இல்லை' என்ற பெயரில் தமிழில்டப்செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மகேஷ்பாபுஅடுத்து நடிக்கும் படமான'சர்க்காருவாரி பட்டா'படத்தின்பூஜை, இன்று நடைபெற்றது. இப்படத்தை பரசுராம்பெட்லாஇயக்குகிறார். இவர், ஏற்கனவே 'ஆஞ்சநேயலு', 'கீதாகோவிந்தம்' உள்ளிட்ட படங்களைஇயக்கியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
'சர்க்காருவாரி பட்டா' படத்தில், மகேஷ்பாபுஜோடியாககீர்த்தி சுரேஷ்நடிக்கிறார். சர்க்காருவாரி பட்டா படத்தின்பூஜைஇன்று நடைபெற்றாலும், அடுத்த வருடம் ஜனவரியில் தான் படப்பிடிப்பு தொடங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)