Skip to main content

‘ஜென்டில்மேன் 2’ - தயாராகும் கீரவாணி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

keeravani kick start his composing for Gentleman2 soon

 

1993ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். 

 

தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க இசையமைப்பாளராக ஆஸ்கர் வென்ற கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் படத்திற்கான இசைப்பணிகளை கீரவாணி விரைவில் தொடங்கவுள்ளார். மேலும் இக்கதையை கேட்டு மிகவும் பிடித்துப்போனதாகச் சொல்லியுள்ளார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

 

மேலும் கீரவாணி, தமிழில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டு நாட்டு பாடல்  என்னுடைய சிறந்த படைப்பு இல்லை” - எம்.எம்.கீரவாணி 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
MM Keeravani spoke about oscar winning song

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களில் வரும் இசையை ஒப்பிடும் போது, ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது. தாமதமாகவோ, முன்னதாகவோ ஒரு பாடலுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், இது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஆனால், அங்கீகாரம் வரவேண்டும் என்றபோது, ​​அது ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வரும்” என்று கூறினார்.

முன்னதாக ஆஸ்கர் விருது வென்ற போது எம்.எம்.கீரவாணி கூறியதாவது, “நான் தச்சர்களின் சத்தத்தை கேட்டு வளர்ந்தேன். இப்போது நான் ஆஸ்கார் விருதுகளுடன் இருக்கிறேன். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றி பெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனின் பெருமையும், என்னை உலகின் உச்சியில் வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

"குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்து பாடல்கள்" - வைரமுத்து

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

vairamuthu about gentleman 2 songs

 

1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். ஆஸ்கர் வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், வைரமுத்து அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியுள்ளார். 

 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (09.10.2023) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன், வைரமுத்து ஆகியோர் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். பின்பு மூன்று பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைரமுத்து, "நிகழ் கால தனலடிக்கிற, எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட ஒரு தகவல் சொல்லக் கூடிய படமாக இந்தப் படம் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம். எல்லாவற்றையும் விட நான் மிகவும் ரசித்தது கீரவாணியின் இசை. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்த படத்தில் 7 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்த 7 பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பை குஞ்சுமோன் எனக்கு வழங்கியிருக்கிறார். 

 

அத்தனை பாடல்களும் என் பாடல்கள் என்று சொல்வதை விட தமிழின் பாடல்கள், தமிழ் கொஞ்சுகிற பாடல்கள், தமிழை உயர்த்திப் பிடிக்கிற பாடல்கள். குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்துப் பாடல்கள் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன" என்றார்.