Advertisment

“நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டீங்க” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

publive-image

Advertisment

'வெந்து தணிந்தது காடு' படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று (09/11/2022) மாலை நடைபெற்றது. விழாவில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நடிகர் சிம்பு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி K.கணேஷ், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், "வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய வெற்றி. அந்த வெற்றியைக் கொடுத்த கௌதம் அவர்களுக்கும், ஐசரி சார் அவர்களுக்கும், சிம்பு அவர்களுக்கும், எஸ்டிஆர் உடைய ரசிகர்கள் அத்தனை பேருக்கும், தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் அத்தனை பேருக்கும், வந்திருக்கக் கூடிய வெந்து தணிந்தது காடு உடைய டீம், அத்தனை பேருக்கும் நம்முடைய வாழ்த்துகள். ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்னாடி, இந்த படம் முதல எனக்கு தான் போட்டு காட்டுனாங்க. படம் ரொம்ப புடிச்சிருந்தது. வெளில வரும் போது, ஐசரி சாரும், கௌதம் மேனனும், அந்த எக்ஸாம் ஹால்ல, ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ற மாதிரி, வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.

வெளில வந்த உடனே சொன்னேன், கன்பார்ம்மா படம் ஹிட்டு. எந்த டென்ஷனும் நீங்க எடுத்துக்க வேணாம். படம் சூப்பரா இருக்கு. எப்பயுமே கௌதம் மேனன், எஸ்டிஆர் காமினேஷன்ல வந்த விண்ணைத் தாண்டி வருவாயா சூப்பர் ஹிட்டு. சிம்பு தான் வந்து இந்த படம் நீங்க ரெட் ஜெயிண்ட்ல பண்ணணும்னுசொன்னாரு. நான் சொன்னேன்.வேணாம் சிம்பு, ஐசரி கணேசனே பெரிய புரோடியூசரு.அவரே பண்ணட்டுமே, எதுக்கு நான்னு கேட்டேன்.

Advertisment

அப்ப சிம்பு சொன்ன ஒரே வார்த்தை.அண்ணே, விண்ணை தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய ஹிட் ஆச்சு. இந்த படமும் கன்பார்ம்மா எனக்கு தெரிஞ்சி ஹிட் ஆவும். அந்த வெற்றில நீங்களும் இருக்கணும்னு சொன்ன ஒரே வார்த்தைக்காக, சிம்பு உடைய நட்புக்காக, இந்த படத்துல ரெட் ஜெயிண்ட் இணைந்தது. அதுக்கு நன்றி சிம்பு. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டீங்க.சிம்புவுக்கு ஸ்பெஷலா நான் தேங்க் பண்ணனும். அவருதான் சொன்னாரு. அண்ணே இந்த படம் கன்பார்ம்மா அடிக்குது.சூப்பர் ஹிட் ஆகப்போது.எனக்கு அந்த பீல் இருக்குனு சொன்னாரு. விரைவில் வெந்து தணிந்தது காடு- 2 படத்துக்காக நாங்களெல்லாம் ஆவலோடு காத்துருக்கோம்." என்றார்.

udayanidhistlain
இதையும் படியுங்கள்
Subscribe