Advertisment

காமிக்ஸ் எழுத்தாளராகும் ஆக்‌ஷன் நாயகன்! 

keanu reeves

Advertisment

'தி மேட்ரிக்ஸ்' சீரிஸ் படங்களிலும், 'ஸ்பீட்' மற்றும் 'ஜான் விக்' சீரிஸ் படங்களிலும் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் கியானு ரீவ்ஸ். தற்போது ஜான் விக் 4 மற்றும் மேட்ரிக்ஸ் 4 ஆகிய இரு படங்களிலும் நடித்து வருகிறார்.

மக்களுக்கு பல நல்ல உதவிகளைச் செய்து வரும் கியானு, தற்போது காமிக்ஸ் எழுத்தாளராக களமிறங்கியுள்ளார். பூம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 'BRZRKR' என்னும் காமிக்ஸை மேட் கிண்ட், ஓவியக் கலைஞர் அலெஸ்ஸாண்ட்ரோ விட்டி, கலரிஸ்ட் பில் க்ராப்டீ ஆகியோருடன் இணைந்து ரீவ்ஸ் உருவாக்கவுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக நீண்ட ஆயுளுடன் வாழும் ஒரு போர் வீரனைப் பற்றிய ரத்தம் தோய்ந்த கதையைப் பற்றி பேசுகிறது இந்த காமிக்ஸ். காமிக்ஸின் நாயகனுக்கு கேயானு ரீவ்ஸ் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த காமிக்ஸ் குறித்து கூறுமையில், “சிறுவயது முதலே எனக்கு காமிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவுக்குள் நுழைய அவைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தன. BRZRKR காமிக்ஸை உருவாக்கும் பணிகளில் இத்துறையின் மிகப்பெரிய ஆளுமைகளான பூம் ஸ்டூடியோஸ், மேட் கிண்ட், அலெஸ்ஸாண்ட்ரோ விட்டி போன்றோருடன் இணைவதன் மூலம் என் கனவு நனவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த காமிக்ஸ் வருகிற அக்டோபர் மாதம்அமெரிக்காவில் வெளியாகிறது.

keanu reeves
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe