kayal ananthi

'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து நடிகர் சாம் ஜோன்ஸ் நடிக்கும் படம் 'நதி'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ஒர் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை தாமரைச் செல்வன் இயக்குகிறார். இவர், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவி இயக்குநர் ஆவார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகாவாணி, முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை M.S.பிரபு கவனிக்க, இசையமைப்புப் பணிகளை 'கனா' படத்தின் இசையமைப்பாளரான திபு நினன் தாமஸ் மேற்கொள்கிறார்.

Advertisment

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

Advertisment