kayal anandhi

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் 'கயல்'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தின் வெற்றி மற்றும் அவரது கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, திரையுலகில் 'கயல் ஆனந்தி' என அறியப்படுகிறார். இந்நிலையில், சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் கயல் ஆனந்திக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

Advertisment

மணமகன் சாக்ரடீஸ், ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இத்திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.