Advertisment

அந்த விபத்தின் போது நானும் இருந்தேன் - ‘பிச்சைக்காரன்’ பட நாயகி காவ்யா

Kavya Thapa Interview

பிச்சைக்காரன் 2 படத்தின் நாயகி காவ்யா தபருடன் ஒரு நேர்காணல்...

விஜய் ஆண்டனி மற்றும் அருமையான ஒரு டீமுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு நல்ல கேரக்டர் அமையும் கதைகளையே நான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தால் நிறைய ட்விஸ்டுகள் ஏற்படும். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த விபத்து என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி சாருக்கு விபத்து ஏற்பட்ட நேரத்தில் அவருடன் நானும் இருந்தேன். இந்த விபத்து பெரிய அனுபவமாக எனக்கு மாறியது.

Advertisment

விஜய் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ராஷி கண்ணாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள் சார்ந்த கதைகளை நாம் நிறைய எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தென்னிந்தியாவில் சினிமாவுக்கு இருக்கும் மாஸ் மற்றும் கிரேஸ் வேறு எங்கும் நான் காணாதது. இங்குள்ள ரசிகர்களின் அன்பு அலாதியானது. அனைத்து விதமான கேரக்டர்களையும் நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹீரோ போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசை.

Advertisment

என்னுடைய பாட்டி மற்றும் தாத்தாவுடன் சென்று விருது வாங்கும் நாள் தான் என்னுடைய வாழ்வில் முக்கியமான நாளாக இருக்கும். அதை நோக்கி தான் என்னுடைய உழைப்பு இருக்கிறது. என்னுடைய தந்தை என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நான் என்னுடைய தந்தை போல் இருக்கிறேன் என்று அனைவரும் சொல்வார்கள். என்னுடைய அம்மா என்னோடு எங்கும் எப்போதும் டிராவல் செய்பவர். அவர் என்னுடைய நல்ல நண்பர். அனைத்தையும் அவரோடு நான் பகிர்ந்துகொள்வேன். ட்ராவல் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லரை மக்களோடு சேர்ந்து தான் நானும் பார்த்தேன். அனைவரிடமிருந்தும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்குகிடைத்தது.

interview N Studio Pichaikkaran2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe