/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/67_27.jpg)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் இன்று மதியம் அவரது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எனப் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் திருமதி விஜயலட்சுமி அம்மையார் மறைந்த செய்தி வருந்தவைத்தது. அவருக்கும், குடும்பத்தார்க்கும் உறவுகள் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல். காலமே! அவர்தம் துயரத்தையும் கண்ணீரையும் தொட்டுத் துடைத்துவிடு" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புச் சகோதரர்
ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார்
திருமதி விஜயலட்சுமி அம்மையார்
மறைந்த செய்தி
வருந்த வைத்தது.
அவருக்கும், குடும்பத்தார்க்கும்
உறவுகள் அனைவர்க்கும்
என் ஆழ்ந்த இரங்கல்.
காலமே!
அவர்தம் துயரத்தையும்
கண்ணீரையும்
தொட்டுத் துடைத்துவிடு.@OfficeOfOPS
— வைரமுத்து (@Vairamuthu) September 1, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)