Advertisment

தொலைக்காட்சி நடிகையை கரம்பிடித்தார் கவிஞர் சினேகன்!

snehan

Advertisment

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ள கவிஞர் சினேகன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சினேகன், தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை இன்று (29.07.2021) கரம்பிடித்தார். சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 'தேவராட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானநடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

snehan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe