kavin

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இது அவரது தயாரிப்பில் உருவாகும் நான்காவது பாடமாகும்.

Advertisment

இப்படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் கூறுகையில், "ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட, நான் எப்போதும் சிறந்த கதைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களின் ரசிகனாகவே இருந்து வருகிறேன். இயக்குநர் கணேஷ் கே பாபு கூறிய இந்த திரைப்படத்தின் திரைக்கதை என்னை வெகுவாக கவர்ந்தது. 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக, கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இப்படம் இருக்கும். தனது திரைவாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஸ்டார் அந்தஸ்து’ பெற்றிருக்கும் நடிகர் கவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அவரது கவனம், முயற்சிகள் மற்றும் அவரது அழுத்தமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு உயிர் கொடுப்பதும் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கணேஷ் கதை சொல்லும்போது, கவின் நாயகனின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனத் தோன்றியது. மொத்த படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.