kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Advertisment

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.