நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியாக நடித்துள்ள படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகும் தயாரித்துள்ள இப்படத்தில் விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இவரது இசையில் அனிருத் குரலில் வெளியான ‘திருடி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் நேற்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கவின் கலந்து கொண்டு பேசுகையில், “உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி.
'என்னாலே...' பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன் அண்ணன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, மற்றும் வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார், ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/17/257-2025-09-17-19-14-48.jpg)