kavin sathish movie titled as kiss

கவின் நடிப்பில் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் 2023ஆம் ஆண்டு பூஜையுடன் ஆரம்பித்தது. அதில் மிஷ்கின் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்பு சில காரணங்களால் அவர் விலகியதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்திற்கு ‘கிஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisment

இதையடுத்து விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு ‘கிஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தலைப்புடன் கூடிய ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவின் நிற்க அவரை சுற்றி நிற்கும் ஜோடிகள் அனைவரும் முத்தம் கொடுத்த படியே நிற்கின்றனர். ஆனால் கவினின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் டீசர் காதலர் தினத்தன்று வெளியாகும் எனவும் தமிழ்,இந்தி,தெலுங்கில் இப்படம் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தில் இருந்து அனிருத் விலகியதையும் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு பதில் ஜென் மார்டின் இசையமைக்கிறார். கவினின் முந்தைய படமான ப்ளடி பெக்கர் படத்திற்கு இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment