தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின் தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி வருகிறார். இப்போதைக்கு நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கிஸ்’, விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத் தவிர்த்து நயன்தாராவுடன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கவுள்ளதாகவும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் கவின் நடிக்கும் புது பட அறிவிப்பு நேற்று ஒன்று வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தண்டட்டி பட இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை திங் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கென் ராய்சன் இயக்குகிறார். இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. பூஜையில் கவின், பிரியங்கா மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இப்படம் கவினின் 9வது படமாக உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

360

இப்படம் மூலம் இந்தாண்டு நாயகியாக முதல் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் பிரியங்கா மோகன். கடைசியாக நாயகியாக ரவி மோகனின் ‘பிரதர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து தனுஷ் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார். இதையடுத்து இப்போது கவினுடன் முதல் முறையாக நடிக்கவுள்ளார். கைவசம் தெலுங்கில் பவன் கல்யாணின் ‘ஓ ஜி’ படத்தை வைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. 

Advertisment