/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/48_42.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ராகுல் இப்படத்தை தயாரிப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடன இயக்குநர் சதீஷ்உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம்உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)