kavin marriage update

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ்இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத்தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம்மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment