கவின் பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ஆறு இயக்குநர்கள்!

kavin

சின்னத்திரை தொடர்களில் நடித்தது மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்த கவின், தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பிகில்’ புகழ் அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e6999740-2a50-4d18-8058-94b562865166" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_32.png" />

இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து, ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பிற்கு இணையான வரவேற்பு, மோஷன் போஸ்டருக்கும் கிடைத்து வருகிறது.

kavin
இதையும் படியுங்கள்
Subscribe