kavin joins with vetrimaaran movie titled as mask

லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக வலம் வருகிறார் கவின். இதில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தை அடுத்துஇயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) என்ற தலைப்பில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கவினோடு இணைந்து ஆன்ரியா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்திற்கு மாஸ்க் எனத்தலைப்பு வைக்கப்படுள்ளது. படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. பூஜையில் வெற்றிமாறன், கவின் ஆன்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் மூலம் வெற்றிமாறன் பேனரில் நான்காவது முறையாக நடிக்கிறார் ஆன்ரியா. இதற்கு முன்னதாக வடசென்னை, அனல் மேலே பனித்துளி, மனுசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் மனுசி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனை பொறுத்தவரை விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இறுகட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. மேலும் சூரியின் கருடன் படத்தைத்தயரித்து அதற்கு கதையும் எழுதியுள்ளார். இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment