gdgd

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை வரும் மே 17- ஆம் தேதி வரை நீட்டித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், கட்டில் திரைப்படக்குழு சிறுவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நடனப் போட்டியை நடத்தவுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Advertisment

Advertisment

''கட்டில் திரைப்படக்குழு நடத்தும் "ஆடல் பாடல் கட்டில்" சிறுவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நடனப்போட்டிக்கு. ரூ.50.000 ஐபரிசுத்தொகையாக வழங்க இருக்கிறோம்.

நமது மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள 'கட்டில்'திரைப்படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்கச் சிறுவர்களுக்காக உருவாக்கிய கரோனா கானா பாடலுக்குச்சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

உலககெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். நடனமாடிய வீடியோவை +91 9150566759என்ற whatsapp நம்பருக்கு மே 25(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

http://onelink.to/nknapp

முதல் பரிசு : 25,000

இரண்டாம் பரிசு : 15,000

மூன்றாம் பரிசு : 10,000

கட்டில் திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படும்.

உலகமே முடங்கி கிடக்கும் இந்தத் தருணத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு இம்மாதிரியான போட்டிகளையும் அறிவித்து குழந்தைகளை மகிழ்விப்பதில் 'கட்டில்'திரைப்படக்குழு பெருமை கொள்கிறது'' என்று அப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.