Advertisment

நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகும் 'காட்டேரி'...

katteri

Advertisment

'யாமிருக்க பயமேன்' மற்றும் 'கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டிகே. இவர் தற்போது இயக்கி ரிலீஸுக்கு தயாராகவுள்ள படம் ‘காட்டேரி’.

ஸ்டூடியோ க்ரீன்ஸ் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் திடீரென 'ஜீ5' நிறுவன ஓ.டி.டி.-யில் 'காட்டேரி' படம் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும்என்பது குறித்த எந்தத்தகவலும்வெளியாகவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

vaibhav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe