‘மார்கோ’ பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, அடுத்ததாக, பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கவுள்ளார். இதில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகுவதாக கூறப்படுகிறது.
இப்படம் ‘கட்டாளன்’ என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தின் பணிகள் கொச்சியில் பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், படத்தின் கதைக்களத்தை பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட அரங்கில், பூஜை நடத்தப்பட்டது.
இந்த விழாவில், அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங், ரஜிஷா விஜயன், ஹனான் ஷா, ஜகதீஷ், சித்திக், பார்த்த் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படம் பான்-இந்திய படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.