vjs

Advertisment

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியான விஜய் சேதுபதி தற்போது இந்தி மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார்.

‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைக்கார்’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த ரீமேக் படத்தைப் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் அமீர்கானுடன் ‘லால் சிங் சட்டா’ படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று பேசப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ‘அந்தாதுன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.