Advertisment

மதுரையில் உள்ள பள்ளிக்கு உதவி கோரி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வேண்டுகோள்!

Katrina Kaif

மதுரையில் உள்ள மவுண்டைன் வியூ என்ற பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, நிதியுதவி கோரி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

மதுரையில் அமைந்துள்ள மவுண்டைன் வியூ என்ற பள்ளியானது கத்ரீனா கைஃப் தயாரின் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்ட பள்ளியாகும். 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படிப்பதற்கான வசதி உள்ளது. இங்கு, மொத்தம் 200 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஏழை குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவித்து வரும் இப்பள்ளியில் மேலும் 14 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இதனையொட்டி அவர் இந்த உதவியை கோரியுள்ளார்.

Advertisment

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம். அது பல குழந்தைகள் தங்களது கனவை நனவாக்க உதவும். தற்போது நாம் இருக்கும் கடினமான நிலையை கருத்தில் கொண்டால், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மிக முக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

katrina kaif
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe