vbdsbs

Advertisment

இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட், அக்ஷய் குமார் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

“நான் எடுத்துக்கொண்ட கரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாகத் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள்அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.