‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் குறித்து கத்ரீனா கைஃப்

katrina kaif about merry christmas movie

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இப்படம் குறித்து பேசிய கத்ரீனா கைஃப், “இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணியாற்றியதால் எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குநரான ஸ்ரீராம் ராகவனின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும், சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்.

அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம். இந்தி மற்றும் தமிழில் படமாக்கப்பட்டிருக்கும் மெரி கிறிஸ்மஸ் கதைக்கு வலு சேர்க்கும் துணை பாத்திரங்களுடன் ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தைத் தரும்” என்றார்.

actor vijay sethupathi katrina kaif
இதையும் படியுங்கள்
Subscribe