Advertisment

ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு 

jyothika

'நாச்சியார்' படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹிந்தியில் வெற்றிபெற்ற 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 'காற்றின் மொழி' என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 4-ஆம் தேதி துவங்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொழி' ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒருமாதத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகாவும், அவரது கணவராக நடிகர் விதார்த்தும் நடிக்கிறார்.

Advertisment
radhamohan kaatrinmozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe