/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/46_16.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, பின் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தியது. பின்னர், இந்தியாவில் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.
இந்த நிலையில், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இப்படத்தின் டீஸர் உள்ளிட்ட பல அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)