"பரியேறும் பெருமாள்" வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் திரைப்படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை "பொயட் ஸ்டுடியோ" மற்றும் "சனா ஸ்டுடியோ" நிறுவனத்தினர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார்.

Advertisment

kathir

தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் குமரன். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில், இப்போது படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா பணியாற்றியுள்ளார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஒரு கால்பந்தாட்டம் சம்பத்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.