பாலிவுட்டில் கடந்த வருடம் நிறையவே பயோபிக்கள் எடுத்தாகிவிட்டது. தற்போது அங்கு வேறு மொழி படங்களை ரிமேக் செய்வதுதான் ட்ரெண்ட் போல், அதிலும் கபிர் சிங் வெற்றிக்கு பின்னர். வரிசையாக ரிமேக்களை நடிகர்கள் லிஸ்டில் அடுக்கி கொண்டே போகிறார்கள்.

Advertisment

kaththi vijay

நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் மங்கள் மிஸன் என்கிற படம் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தை ஜெகன் சக்தி என்பவர் இயக்கியுள்ளார். இவருடைய அடுத்த படமும் அக்‌ஷய் குமாரை வைத்துதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முர்கதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் கத்தி. இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டிப்போட்டனர். முதலில் ஷாருக் கான் நடிப்பார் என்று சொல்லப்பட்டது அதை தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கத்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமார் நடிக்க ஜெகன் சக்தி இயக்குகிறார் என்று தகவல் வெளியாகிவருகிறது. ஏற்கனவே அக்‌ஷய் குமார் லக்‌ஷ்மி பாம், பச்சன் பாண்டே என்கிற இரு தமிழ் ரீமேக் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது படங்களில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.