பாகுபலி 2 வை தொடர்ந்து பிரபாஸ், சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக பெரும் பொருட்செலவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். தமிழ் நடிகர் அருண் விஜய்தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்கு திரைப்படதுறையில் இளம் இயக்குனர் சூஜீத், சாஹோ படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை யூவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் பின்னணி இசையமைக்க, டனிஷ்க் பக்சி என்பவர் படத்திற்கு இசயமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டீஸர், இந்தியா முழுவதும் பல சாதனைகளை படைத்தது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீஸரும் இத்தனை மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியது.
இப்படத்தில் அடுத்து என்ன அப்டேட் விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காலை காதல் சைக்கோ என்ற பாடலுக்கான டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த பாடல் வருகிற 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.