Kasturi Shankar talk about kamalhaasan

அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்குஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது எனக் கூறியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக கமல் அளித்த பேட்டியில், “ராஜராஜ சோழர் காலத்தில் இந்து மதம் என்றேபெயரே கிடையாது. வைணவம், சைவம், சமணம் என இருந்ததே தவிர இந்து என்று பெயரே இல்லை. அது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர். எங்களுக்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கமலின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா (encyclopedia). அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில்ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரேஇல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.