Advertisment

இதெல்லாம் ஒரு புரோகிராமா? பிக்பாஸை விமர்சித்த கஸ்தூரி...

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வருடா வருடம் 100 நாட்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் தற்போது நடந்து வருகிறது. கமல்ஹாசன்தான் இந்த தொடரையும் தொகுத்து வழங்குகிறார். சுமார் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இப்போட்டியில் தொடக்கத்திலேயே செண்டிமெண்ட்டாக தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

kasthuri

அழுக்காட்சி காட்சிகள் பல தற்போது ஒளிபரப்ப தொடங்கிவிட்டதால் சமூக வலைதளத்தில் இதை கிண்டல் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில், “போதும்பா... விட்ருங்கப்பா... இன்னும் எத்தனை நாளைக்கு சென்டிமென்ட்டை பிழியப் போறீங்க? இப்பவே யாரு எவ்வளவு சோகக்கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை. இதுக்கு மேலயும் சோகத்தைப் பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தைப் பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோனு திக்கு திக்குனு இருக்கு.

இதே சேனல்ல ‘கதையல்ல ...’னு சொல்லி ஒரு நிகழ்ச்சி. வந்தவங்களை அமுக்கிப் பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க. அதில் ஆரம்பித்தது, எல்லா புரோகிராமிலும் அழுவாச்சி ஃப்ளாஷ்பேக். எங்க ஃபிளாட்ஸ்ல எல்லா வீட்டிலும் குழந்தைகள் பார்க்குறாங்க. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது? பெற்றோர்களே... பொறுப்புடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Biggboss kasthuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe