இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 'அஜித்தின் 61'படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கோட் சூட்டுடன் வெள்ளை நிற தாடியில் காதில் கடுக்கனுடன்மாஸாகவும் ஸ்டைலாகவும் தோன்றியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வரும் நிலையில்நடிகை கஸ்தூரி அஜித்தின் புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக்கொள்ளும் நாட்டில் தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம். சுத்தி போடுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக்கொள்ளும் நாட்டில்
தல அஜித்தின் தனித்துவம் அழகு.
நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு.
அழகான குடும்பம். சுத்தி போடுங்க! #thala#AjithKumar#nermai#Valimaipic.twitter.com/ocw3sprY8O
— Kasturi Shankar (@KasthuriShankar) March 3, 2022