Advertisment

மேடையில் சிவக்குமாரை கலாய்த்த கஸ்தூரி... கோபமான கார்த்தி...!

karthi

Advertisment

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஜூலை காற்றில்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார்.இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ராகார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி மேடைக்கு கார்த்தியை அழைத்தபோது, உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி தனது போனை எடுத்தார். முதலில் புன்னகையுடன் சம்மதித்த கார்த்தி கஸ்தூரி, 'அப்பா இல்ல அதுக்குள்ள எடுத்துக்கிறேன்' என்று கூறவும் சட்டென கோபமடைந்தார். பின்னர் மைக்கை பிடித்து பேசியபோது.... "இப்போதெல்லாம் விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் மரியாதை இல்லை அனுமதி கேட்டு விட்டு செல்பி எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. "செல்பி என்ற ஒரு விஷயத்திற்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள். பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால், முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்தே போய் விட்டோம். ஒவ்வொரு செல்போனிலும் தற்பொழுது முன் பக்கமும், பின் பக்கமும் பிளாஷ் இருக்கிறது. அவ்வளவு லைட்ஸ் கண்களில் பட்டால், கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாதா...? இது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

இந்த படத்தின் இயக்குனர் சுந்தரம் என்னுடைய பால்யகால தோழர். என்னுடைய தந்தையார் சிறிய வயதில் இருக்கும் பொழுது எங்களை அதிகமாக வெளியே அழைத்துச் சென்றதில்லை. அழைத்துச் சென்ற இடம் கொடைக்கானலில் இருக்கும் சுந்தரம் அவர்களின் வீடுதான். அவர்களின் வீட்டுக்கு செல்லும்பொழுது சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் அரவணைப்பு. இயக்குனர் சுந்தரம், இன்ஜினியரிங் முடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். தற்போதெல்லாம் இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவுக்கு வருவது அதிகரித்து விட்டது. ஏனெனில் சினிமா அனைத்து தரப்பினரையும் உள்ளிழுத்துவிடுகிறது. சினிமா ஒரு போராட்ட குணத்தை அனைவரும் மனதில் விதைத்து விடும். அது பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்கு இது ஒரு வழி என்பதற்காக அனைவரும் சினிமாவிற்கு வருகிறார்கள். சந்தோஷப்படுவதை பார்ப்பதற்காகவே வருகிறார்கள்.

Advertisment

என்னை திரையுலகில் அடையாளப்படுத்திய பல பாடல்கள் எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். அவரும் இந்த படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார் என்பதால் அவருடைய ஆசீர்வாதமும் இந்த படத்தின் வெற்றிக்கு இருக்கும். தற்பொழுது நேர்மையான விஷயங்கள் பேசப்படுவது விட எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுவது தான் ஹைலைட் ஆகிவிட்டது. நாயகன் நாயகி வராத ஜுலைக்காற்றில் என்ற படத்தின் இசையை நடிகர் கார்த்தி வெளியிட்டார் என்று தான் செய்தி வெளியாகும். பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்தைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுவது விட, வேறு விஷயங்கள் தான் ஹைலைட்டாக பேசப்படும். இந்த படத்தின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சிகளுக்காக வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

kasthuri karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe