Skip to main content

“என்ன பொழப்போ, புரியலடா சாமி...” - வனிதாவை சீண்டிய கஸ்தூரி! 

 

kasthuri

 

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னிடம் முறையாக விவாகரத்துப் பெறாமல், வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

 

பின்னர், இது பெரும் சர்ச்சையாக உருவானது. பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக கஸ்தூரி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் வனிதாவை விமர்சித்தனர். விமர்சித்த அனைவரையும் வாயடைக்கும் வகையில், ஒவ்வொருவருடனும் சண்டையிட்டுப் பதிலளித்து வந்தார் வனிதா.

 

சமீபத்தில் தனது 40 -ஆவது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் கோவா சென்றிருந்தார் வனிதா. அங்கு அவருக்கும் பீட்டர் பாலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல் வெளியானது.

 

இதுகுறித்து ஒரு நீண்ட உருக்கமான அறிக்கையை வெளியிட்டார். தற்போது தனக்கும் பீட்டர் பாலுக்கும் என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா. அதில், “உண்மையில், என்னை விட அவருக்குப் போதைப் பழக்கம்தான் முக்கியம் எனத் தெரிந்தவுடன் மனம் உடைந்துவிட்டது. அனைத்து விஷயங்களிலுமே முட்டாளாக ஏமாந்து போய் நிற்கிறேன். சொந்தக் காலில் நின்று பீட்டர் பாலையும், என் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் எனத் தவறான முடிவுகள் எடுக்க மாட்டேன். திட்டுகிறீர்களோ, பாராட்டுகிறீர்களோ ஏதோ ஒரு விஷயத்தில் அக்கறை இருப்பதால்தான் பேசுகிறீர்கள். இப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன், பயமாக இருக்கிறது. அவருக்கு ஏதேனும் என்றால் என்னைத் தான் குற்றம் சொல்ல வருவார்கள், பரவாயில்லை.

 

இந்த ஒரு வருடம் அவர் என்னைச் சந்தித்தது, என்னை அவர் சந்தித்ததும் ஒரு காரணமாகத்தான் என எடுத்துக் கொள்கிறேன். என் காதல் உண்மை, தோற்றுவிட்டேன். திருமணத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது. ஆனால் எனக்கு அமையவில்லை. என் வாழ்க்கை தொடரும். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டுதான் இருப்பேன். ஒரு பெண்ணாக காயப்பட்டுவிட்டேன். என் குழந்தைகளால் வலுவாக மீண்டும் வருவேன். அவர் மருத்துவமனையில் இருக்கும் போது எலிசபெத்துக்குப் பலமுறை போன் செய்தேன். அவருடைய வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. மீண்டும் அவரோடு தாராளமாக வாழுங்கள். நடுவில் வந்தேன், நடுவிலேயே விலகிப் போய்விடுகிறேன். நன்றி” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
 

kasturi

 

இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், “நீங்கள் வனிதா பேசிய வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “வீடியோ பார்க்கவில்லை, பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றார். அதன் பிறகு, அதற்கு கருத்துத் தெரிவித்துள்ள கஸ்தூரி, “ஓ மை காட்! நான் அந்தக் கண்ணீர் வீடியோவைப் பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும்தான் பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான்.

 

cnc

 

ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை. வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவச் செலவுக்கான பணத்தைச் சம்பாதிக்கப் பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.