ADVERTISEMENT

"நான் ட்ரம்ப் ஆதரவாளர் இல்லை; ஆனால்" - நடிகை கஸ்தூரி ட்விட் 

10:34 AM Nov 05, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகவும், பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, ஜோ பைடன் முன்னிலை பெற்றிருக்கிறார். இன்னும் முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பல லட்சம் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில மாகாணங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகாததால், திருப்புமுனையாக எதேனும் நடக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு ட்ரம்ப், "அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது. இது அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி. இதனை எதிர்த்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்கு எண்ணிக்கையிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க தேர்தலில் மோசடி செய்வதாக ஜோ பைடன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " நான் ட்ரம்ப் ஆதரவாளர் இல்லை. ஆனால் (ஜோ) பைடனோ / (கமலா) ஹாரிஸோ இவ்வாறுதான் ஜெயிப்பார்கள் என்றால், அது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும். மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் தற்போது நடப்பது இழிவான ஒன்று" என கூறியுள்ள அவர் வாக்கு எண்ணிக்கை செய்வாய்க்கிழமை வரை நடைபெறும் என்பதற்கும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையை குறித்து சில ட்விட்டுக்களையும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT