Skip to main content

"நான் ட்ரம்ப் ஆதரவாளர் இல்லை; ஆனால்" - நடிகை கஸ்தூரி ட்விட் 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
kasthuri

 

 

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகவும், பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, ஜோ பைடன் முன்னிலை பெற்றிருக்கிறார். இன்னும் முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பல லட்சம் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ஒரு சில மாகாணங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகாததால், திருப்புமுனையாக எதேனும் நடக்குமா என்று  எதிர்பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு ட்ரம்ப், "அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது. இது அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி. இதனை எதிர்த்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்கு எண்ணிக்கையிலும்  நிறுத்தப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  

 

இந்தநிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க தேர்தலில் மோசடி செய்வதாக ஜோ பைடன்  மீது குற்றம்  சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " நான் ட்ரம்ப் ஆதரவாளர் இல்லை. ஆனால் (ஜோ) பைடனோ / (கமலா) ஹாரிஸோ இவ்வாறுதான் ஜெயிப்பார்கள் என்றால், அது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும். மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் தற்போது நடப்பது இழிவான ஒன்று" என கூறியுள்ள அவர் வாக்கு எண்ணிக்கை செய்வாய்க்கிழமை வரை நடைபெறும் என்பதற்கும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையை குறித்து சில ட்விட்டுக்களையும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்காக கமல் சமரசம் செய்து கொள்கிறார்” - நடிகை கஸ்தூரி

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

Kasturi Shankar talk about kamalhaasan

 

அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வரும்  நிலையில் தற்போது கமல்ஹாசனும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது எனக் கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக கமல் அளித்த பேட்டியில், “ராஜராஜ சோழர் காலத்தில் இந்து மதம் என்றே பெயரே கிடையாது. வைணவம், சைவம், சமணம் என இருந்ததே தவிர இந்து என்று பெயரே இல்லை. அது வெள்ளைக்காரர்கள்  வைத்த பெயர். எங்களுக்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் கமலின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா (encyclopedia). அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Next Story

அமெரிக்க அரசின் ஆவணங்களை மறைத்து வைத்த ட்ரம்ப்! 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Trump hide US government documents

 

அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை நாளேடுகள் பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு இடையே ஒளித்து வைத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

அதிபர் பதவியை இழந்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும் போது அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள  எப்.பி.ஐ " டிரம்பின் புளோரிடா மாளிகையில் நடத்திய ஆய்வில்  மொத்தமிருந்த15 பெட்டிகளில் 14 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதில் அமெரிக்க அரசின் வெளியிடக்கூடாத ரகசிய ஆவணங்களை  பத்திரிகைகள், கடிதங்கள் மற்றும் நாளேடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளது.  

 

14 பெட்டிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 184 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டது என்றும் 25 ஆவணங்கள் மிக ரகசியத் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.