kasthuri

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தியாவில் இந்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது 13 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

Advertisment

இதனிடையே மற்ற இந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் கமல்ஹாசனை தொகுப்பாளராக வைத்து தொடங்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் மூன்று பிக்பாஸ்களைகடந்து தற்போது நான்காவது சீசன் அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment

தற்போது இதற்கான விளம்பரங்களைஅனைத்து வகையிலும் விளம்பரப்படுத்தி வரும் நிலையில் மூன்றாவது சீசன் போட்டியாளர் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக பங்கேற்றதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே ஆதரவற்ற குழந்தைகளோட ஆபரே‌ஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. ஆனால் இதிலும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.