இயக்குநர் தமிழ்மாமனி  துரை பாலசுந்தரம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கஸ்தூரி, விக்னேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ராகு கேது'. இப்படத்தில் சமுத்திரக்கனி சிவனாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும், கஸ்தூரி துர்க்கை அம்மனாகவும் நடித்துள்ளார். இப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அந்த வகையில் கஸ்தூரியிடம், கவர்ச்சி நடிகை அம்மன் வேடத்தில் நடிக்கலாமா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், “கவர்ச்சி என்பதும் நடிப்பு தான், அம்மன் என்பதும் நடிப்பு தான். இதில் நான் முதலும் இல்லை, கடைசியும் இல்லை. பட்டனத்தில் பூதம் படத்தில் நடித்த விஜயா தான் பிற்காலத்தில் அம்மன் வேடத்தில் கோலோச்சியவர். 

அதே போல ஸ்ரீ வித்யா, ஜெயலலிதா, ஸ்ரீ பிரியா, ரம்யா கிருஷ்ணா, நயன்தாரா, ரோஜா, மீனா என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இவர்களை எல்லாரையும் கேட்காத கேள்வியை ஏன் என்னை வந்து கேட்கிறீர்கள். அது அவசியமற்றது. எல்லா கதாபாத்திரத்தையும் ஏற்றுகிற அளவில் தான் நடித்துள்ளேன்” என்றார்.