Advertisment

ஆதரிக்கும் பாஜக, வலுக்கும் எதிர்ப்பு; இயக்குநருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு!

Kashmir Files film director Vivek Agnihotri Y category security Protection

பிரபல இயக்குநர்விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில்அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில்இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைகொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின்பு பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே கடந்த 11ஆம் தேதி இப்படம் வெளியானது.

Advertisment

மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாஜக ஆளும் ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த, உ.பி மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இப்படம் குறித்து விமர்சித்ததோடு,‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்றுவேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தை 'லக்கிம்பூர்ஃபைல்ஸ்’ என்ற பெயரில் படமாக எடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் படத்தின் இயக்குநர்விவேக் அக்னிஹோத்ரிக்குஅச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்அவருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'Y' பிரிவு பாதுகாப்பின்கீழ்விவேக் அக்னிஹோத்ரிக்கு8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், அதில் 2 கமாண்டோ படையினரும்அடங்குவர் எனவும் கூறப்படுகிறது.

akilesh yadav india pm narendra modi the kashmir files
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe