Advertisment

பிரியா ஆனந்துக்கு க்ளாப் அடித்த மிர்ச்சி சிவா!

grhrshrs

இயக்குநர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் ‘காசேதான் கடவுளடா’படத்தின் படப்பிடிப்பு, நேற்று (16.07.2021) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலாஉட்பட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைப்பில் உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் கண்ணன் பேசியபோது...

Advertisment

vdfbsdfbds

"மிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்குப் பிறகு தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னொருபுறம்தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் ‘காசேதான் கடவுளடா’படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது. தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும்" என்றார்.

Advertisment

priya anand kasethan kadavulada
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe