/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/159_5.jpg)
சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, பிரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கசட தபற'. இப்படத்தை வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஆந்தாலஜி வகையில் 6 கதைகள் கொண்ட இப்படத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. இந்தச் சூழலில் 'கசட தபற' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த தயாரிப்பு தரப்பு, சில ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், சோனி லைவ் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து, 'கசட தபற' திரைப்படம் சோனி லைவ் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இத்தகவலை, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)