Advertisment

‘இது நம்ம டைம்... செம்ம அடி அடிக்கப் போறேன்’ - ‘கருப்பு’ சூர்யா

289

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ மற்றும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார் சூர்யா. இதில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ரிலீஸூக்கு தயராகி வருகிறது. வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

Advertisment

கருப்பு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் படத் தலைப்பிற்கேற்ப கருப்பு வேட்டி, கருப்பு நிற சட்டையுடன் சுருட்டு பிடித்துக் கொண்டே சூர்யா நடந்து வருகிறார். அவருக்கு இரு பக்கமும் கருப்பு சாமி வேடம் போட்டவர்கள் கையில் பெரிய அரிவாளுடன் நிற்கின்றனர்.

போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் இன்று என்பதால் அதை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கையில், முதலில் கருப்பு சாமியை அறிமுகப்படுத்துகின்றனர். பின்பு அதே போல் சூர்யா இருப்பது போல் காட்டுகின்றனர். அதே சமயம் வக்கீலாக சூர்யா வருகிறார். எனக்கு இன்னொரு பேரு இருக்கு என சொல்லும் சூர்யா பின்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கெட்டப்பிலும் வக்கீல் கெட்டப்பிலும் மாறி மாறி வருகிறார். அடுத்து ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகளுடன் டீசர் முடிகிறது. இடையில் அவர் படத்தில் இடம்பெற்ற கஜினி பட வாட்டர்மிலான் காட்சி ரெஃபரன்சும் இடம்பெறுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Karuppu RJ Balaji actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe