Advertisment

“உலகம் முழுவதும் ஒரே சண்டை தான்...” - அழுத்தமான வசனங்களில் ‘கருப்பர் நகரம்’

Karuppar Nagaram teaser released

Advertisment

நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஆண்ட்ரியாவை வைத்து இப்போது ‘மனுசி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

இதனிடையே ஜெய்யை வைத்து, ‘கருப்பர் நகரம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு கே.எஸ் பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அன்மையில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அறம் படம் போலவே இந்த படத்திலும் ஒரு அழுத்தமான கதையை எமோஷனல், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

மேலும் டீசரில் வரும் வசனங்கள் பவர்ஃபுல்லாக அமைந்துள்ளது. குறிப்பாக, “உலகம் முழுவதும் ஒரே சண்டை தான் வேளாங்கண்ணி... 100 பேர் பாடுபட்டு ஒருத்தன் புடுங்கி திங்கிறதா... இல்ல 100 பேரு பாடுபட்டு பங்கு போட்டுகிறதா...” என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

DIRECTOR GOPI NAINAR jai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe