Advertisment

ஐந்து கதாநாயகிகள் ஹீரோவாக நடிக்கும் படம்!

bgdhshs

'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனநர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்தப் படத்தில்நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

Advertisment

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisment

actress janani iyer regina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe